அ முதல் வரை வாழ விடு

அருமையாய் சொன்ன அம்மா நீ..
ஆசிர்வதிக்கிறேன் உன் காதலுக்கு என்று
இன்பமாய் இருந்தது..இதயத்திற்க்கு
ஈடு இணை இல்லாமல் காதலித்தேன்
உண்மையாக காதலித்தேன்.என்று
ஊரார்,உற்றார் முன் சொன்னேன் நான்.
எல்லாம் உன் விதி படி நடக்கட்டும் என்றாய் நீ
ஏன் இப்போது மறுக்கிறாய்..அவள் ஜாதி வேறு என்று
ஐய்ய படாதே.நாம் அனைவரும் ஒரே சாதிதான்
ஒன்றாய் வாழ விடு.நான் காதலித்த என் காதலியோடு
ஓர் ஆயிரம் முறை சொல்வேன்..சாதிகள் இல்லை என்று
ஔவ்வை பாட்டி வாழ்த்துவது போல் வாழ்த்தி விடு என்னை நீ.
;. தே வாழ்ந்து விடுகிறேன்.என் காதலியோடு என்றும் நான்.