தண்டனை

வெட்கமில்லை வெட்கமில்லை
பெண்மையை இழிவு செய்தலில்
இச்சை கொண்டு இன்பந் துய்த்து
கைதி யான போதிலும்
வெட்கமில்லை வெட்கமில்லை
வெட்கமென்று ஒன்று இல்லையே!

சக்தியில்லை சக்தியில்லை
இவர் செய்கை தன்னை நிறுத்தவே
உப்பரிகை சட்டமெல்லாம்
ஓட்டை கொண்டு இருப்பதாலே
சக்தியில்லை சக்தியில்லை
சக்தி என்று ஒன்று இல்லையே!

தப்பு இல்லை தப்பு இல்லை
நங்கையரின் கற்பதனை
நாயெனவெ அழித்தவரை
நட்டநடு வீதியிலே
வெட்டி பலி இட்டாலும்
தப்பு இல்லை தப்பு இல்லை
தப்பு ஒன்றும் இல்லையே!

(சமீபத்தில் டெல்லியில் டாக்சி டிரைவரின் அக்கிரமச் செயல் விளைத்த வரிகள் இவை)

எழுதியவர் : கருணா (9-Dec-14, 9:33 am)
Tanglish : thandanai
பார்வை : 171

புதிய படைப்புகள்

மேலே