வலை மொழி

வலை மொழி

உலகப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராணுவ வீரன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான். இந்நிலையில் ஹிட்லர் தம் படைத்தளபதியை கூப்பிடுகிறார்.
"என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் ?
தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன். என்னதான் எதிராளியாக இருந்தாலும் அவன் நிகரில்லாத சிறந்த இறை பக்தன். நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் கிளம்பி சென்றான்.
வீரனின் தலைமாட்டுகருகில் நின்றான்.காலடிஓசையை கேட்ட வீரன் விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை.ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன தளபதி எதையும் அவன் கூறவில்லை என்றான் .எல்லா விவரங்களையும் அறிந்த ஹிட்லர்
"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார். இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த தளபதியை ஏமாற்ற வில்லை வீரன் தன் வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றி கூறுகிறேன்."
1 .டுவிட்டர் ல சிக்காதே
2வாட்ஸ்ப்புக்குள் போகாதே.
3முகநூலைத் தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.
4வாகனம் ஓட்டும் போது கைபேசியை கையில் வைத்துக்கொள்ளாதே".என்பதுதான்...

எழுதியவர் : பந்தார்விரலி (18-Dec-14, 2:48 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : valai mozhi
பார்வை : 152

மேலே