சாமர்த்தியமாய் பேசி
ஐநூறு ரூபாய்
மதிப்புள்ள
சட்டைக்கு
அட்டை வைத்து
ஆயிரத்து ஐநூறு
என்று போட்டிருந்ததை
ஆசையாய்
எடுத்து வந்தான்
அவன்..
வெளியில்..வெயிலில்..
தள்ளுவண்டி முதியவரிடம்
பேரம்..சாமர்த்தியமாய்
பேசி வாங்கினான் பத்து ரூபாய்க்கு..
பதினைந்து ரூபாய் பழத்தை !