நீலக்குயில் தேசம்21---ப்ரியா
இதுவரை.......
கதை நாயகி கயல்விழி சிறுவயதில் அப்பாவை இழந்து அம்மா மற்றும் தாத்தாப்பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் செல்ல சுட்டிப்பெண்,அவளுக்கு அடிக்கடி கனவில் வரும் கனவுக்காதலனைக் கண்டுபிடிப்பதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். படிப்பு ஒருப்பக்கம், கனவுக்காதல் ஒருப்பக்கம் என தீவிரமாக போய்க்கொண்டிருக்க ஒருநாள் கனவுக்காதலின் முகத்தை கனவில் பார்க்கிறாள் அது தன்னுடன் படிக்கும் சகமாணவர்களில் ஒருவனான ராகேஷ்????அப்போது இவன்தான் நாம் கனவில் தினம் தினம் காணும் அவன் என்று நம்புகிறாள் அந்த நம்பிக்கையுடன் அவனைக்காதலிக்கிறாள், இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கின்றனர்..........அந்த சமயம் தான் ஓடிப்போன தனது அத்தையைப்பற்றி தெரிந்து கொள்கிறாள் தன் தூரத்து அத்தை மகன் அரவிந்தின் உதவியுடன் அத்தை ராஜலெட்சுமியைப்பற்றி முழுதாக தெரிந்து கொள்கிறாள்........அதுமட்டுமல்ல தன்னைப்போல தன உருவத்திலேயே அத்தைக்கும் ஒரு மகள் இருப்பதைப்பற்றி தெரிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறாள் அதிசயமும் கூட!!!!!!!...? எப்படியாது தன் அத்தை குடும்பத்தை பார்க்க நினைக்கும் கயல்விழியால் தன தாத்தாவின் பிடிவாத குணத்தால் அது முடியாமல் போக வெறும் தகவல்களை மட்டும் போனில் பரிமாறிக்கொள்கின்றனர்........நேரில் சந்திக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவிவில்லை..........??????
அந்த சமயம் கயலின் கனவு பற்றி தாத்தா தெரிந்து கொள்கிறார்.....தெரிந்து கொண்டு அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை தனக்கு தெரிந்த பிரபலமான சாமியாரிடம் அழைத்து செல்ல........அவளைப்பார்த்ததும் அந்த சாமியார் சில தகவல்களை சொல்கிறார் அதன்படி அனைவரும் நடந்து கொண்டனர் சிலநாட்களுக்கு பிறகு கயல் அந்த கனவை மொத்தமாக மறந்தே போனாள் இப்பொழுது கனவும் அவளுக்கு வருவதில்லை...........ஆனால் அவள் உடம்பில் இயற்கையாகவே இருக்கும் அந்த சாமந்திப்பூவின் வாசம் அடிக்கடி தாத்தாவிற்கு மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது எனவே வீட்டுக்குத்தெரியாமல் சாமியாரைப்பார்த்து வந்தார்.........அப்பொழுது அந்த சாமியார் சொன்ன வார்த்தைகள் இவரை அப்படியே உலுக்கிவிட்டது................?????
இனி........
"உங்கள் குடும்பத்தில் உங்களால் சபிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் ஏக்கம் இன்றும் மாறவில்லை அவள் மனதில் ஆறாத வடுவாய் இருக்கிறது அவள் யாரென்று யோசித்து சொல்லுங்கள் அது உங்கள் நெருங்கிய உறவாகவும் இருக்கலாம் தூரத்து உறவாகவும் இருக்கலாம் அதுவும் உங்களுக்கு ஒரு குறையே" என்று சாமியார் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தார் கயலின் தாத்தா.......
நம்மளால் சபிக்கப்பட்ட பெண் என்றால் வேறு யாரும் இல்லை நம் மகள் ராஜலெட்சுமிதான் அவளை காலம் முழுவதும் வீட்டில் சேர்க்கவேண்டாமென ஒதுக்கி வைத்திருக்கிறோம் இந்த சமயத்தில் சாமியார் இப்படி சொன்னால் என்ன செய்வது சாமியாரின் கணிப்புதான் இதுவோ? இல்லை நம் வீட்டிலுள்ள யாராவது ஒருவரின் சூழ்ச்சியோ?என்று மனதிற்குள் குழப்பங்களுடன் இருந்தார்......நிச்சயம் நம் வீட்டில் உள்ளவர்களின் வேலையாக இருக்காது அந்தளவுக்கு நம்மளை விடுத்து யாரும் இந்த மாதிரி முடிவு எடுக்கமாட்டார்கள் என்பதை யூகித்தார்,
சுசீலாவிடம் இதைப்பற்றி பேசலாம் அதுதான் தீர்வு என முடிவு செய்தவர் அவளை அழைத்து அன்று முதல் இன்றுவரை சாமியார் சொன்ன அனைத்து விஷயங்களையும் மறைக்காமல் ஒன்றுவிடாமல் சொன்னார்.............அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள் சுசீலா.
அவளது மௌனம் இவரை ஏதோ செய்ய....சொல்லுமா நீ என்ன முடிவு பண்ணிருக்கா?இத பற்றி எனக்கு என்ன சொல்லன்னு தெரில நீ சொன்னா புரிஞ்ச்சிப்பேன் உன் மனசுக்கு தோணுறத சொல்லு எதுனாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் அன்னிக்கு வீம்பாய் இருந்தேன் இன்னிக்கு எனக்கு மனதளவுலயும், உடம்பளவுலயும் அந்த தெம்பு இல்ல.....என்னை வழிநடத்துறதுக்கு எனக்கு இன்று என் மகனும் இல்லை பேரனும் இல்லை......எனக்கு எல்லாமே நீதான் நீ என்ன முடிவெடுக்கிறியோ அதையே செய்ய நான் தயார் என்று இவளிடம் முழு பொறுப்பையும் கொடுத்துவிட்டார் தாத்தா........!
யோசிச்சி முடிவெடுக்கலாம் மாமா நாளைக்கு இதுக்கான ஒரு நல்ல முடிவெடுப்போம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுசீலா.
தனியே சென்று அரை மணிநேரம் யோசித்த சுசீலாவுக்கு இதுதான் சரி எனப்பட்டது........இவ்வளவு நாள் மனதில் உறுதியுடன் இருந்த மாமாவின் கண்களில் இன்று ஏனோ ஒரு புது மாற்றம் வந்திருக்கிறது நம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதற்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை இந்த சமயத்தில் நாம் என்ன சொன்னாலும் மாமா கேப்பாங்க நாம் சொல்ற பதிலாலதான் ராஜலெட்சுமிய சேர்த்துக்குறதும் சேர்த்துக்காததும் இருக்குது அதனால மாமாவின் மனதும் கஷ்டபடாதபடி அதே நேரத்தில் ராஜலெட்சுமி மனதும் கஷ்டபடாதபடி நம் குடும்பத்தை ஒன்று சேர்க்கவேண்டுமென முடிவெடுத்தாள் சுசீலா......!
தன் மனதில் பட்டதை அன்றே மாமாவிடம் சொல்ல அவள் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாமல் அப்படியே அவளை பார்த்துக்கொண்டிருந்தார்.........நாம் சொன்னத மாமா ஏற்றுக்கொள்வாரா?ஏற்றுக்கொள்ளமாட்டாரா?நாம் தான் அவசரப்பட்டுட்டோமோ?என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்..????
தொடரும்.......