வண்ணங்கள்
கனவுகளில் வரும்
காட்சிகளுக்கு
வண்ணங்கள் கிடையாதாம்..
ஆராய்ச்சியாளர்கள்..சொல்கிறார்களாம்..
என் கனவில் நீ வண்ண வண்ணமாய்
நீ வருவதை
அவர்கள்
எப்படி பார்த்திருக்க முடியும்..
பிறகு எப்படி ..
இப்படி ஒரு அபத்தமான முடிவுக்கும்
வந்திருக்கக் கூடும்..?
எங்கோ..தப்பு..!
அது கிடக்கட்டும்..
ஏன்..அந்த நீல கலர்
புடவையை மறுபடியும்
உடுத்தி வந்தாய்
நேற்றைய கனவில்..?
மயில் பச்சை
நல்லாதானே இருந்தது..
நேற்று முன்தினம் ?