கதவை மூடாதே
பசிக்காக ஏழை மாந்தர்
படியேறி வருதல் கண்டு,
பொசுக்கென்று கதவைச் சாத்தும்
பொல்லாத குணத்தி னாலே
நசிகின்ற நிலையில் நாளை
நாயனும்தன் கதவ டைப்பான்
கசிகின்ற அவர்கண் ணீரில்
கரைந்திடும்உம் செல்வ மெல்லாம்!!!
அ.மு.நௌபள்
பசிக்காக ஏழை மாந்தர்
படியேறி வருதல் கண்டு,
பொசுக்கென்று கதவைச் சாத்தும்
பொல்லாத குணத்தி னாலே
நசிகின்ற நிலையில் நாளை
நாயனும்தன் கதவ டைப்பான்
கசிகின்ற அவர்கண் ணீரில்
கரைந்திடும்உம் செல்வ மெல்லாம்!!!
அ.மு.நௌபள்