மண்ணுண்டோன் லீலை வனப்பு

கண்ணனைச் சுற்றியிளங் கன்னியர் வீற்றிருக்க
வெண்ணிலவு வெள்ளொளியில் வேணுகா னம்பிறக்க
பண்ணிசையில் அன்னங்கள் பக்கத்தில் வந்துநிற்க
விண்சூழும் மேகம் விரைந்து
கண்ணாடிக் கைவளையல் காற்றில் கலந்தாட
அண்ணார்ந்துப் பார்த்திட்ட ஆம்பலும் பூத்திருக்க
கண்டோமே காட்சிதனைக் கண்குளிரச் சித்திரத்தில்
மண்ணுண்டோன் லீலை வனப்பு .