நீங்களே சொல்லுங்கள்
என்றோ கிடைத்த
ஒரு வேளை உணவும்
எப்போதோ செரித்திருந்தது....
உணவகம் வரை தான்
நகர்ந்து நகர்ந்து போக முடிந்தது..
உள்ளே செல்ல அனுமதியில்லை...
வாசலிலே
கருணையையும் கண்ணியத்தையும் தேடிக்கிடந்தவனுக்கு
வசைச்சொற்கள் மட்டுமே இலவசமாய் கிடைத்தது...
பக்கம் வாராமல்
ஒதுங்கிப்போவோரால்
பசியோடு சேர்ந்து
அவன் பரிதாபமும் பன்மடங்காகியது...
உள்ளே ஒவ்வொருவனும்
நூறு பருக்கைகளை வீணாக்க...
இங்கே இவன்
பசிக்கதறலோடு சுருண்டு கிடந்தான்...
பகவானால்
இன்று இவன்
விமோச்சனம் பெறுவானோ..
இல்லை
மோட்சம் பெறுவானோ..
ஒதுங்கிப் போவோரே
நீங்களே சொல்லுங்கள்...!!!!