மடக்கணி வெண்பா - 2

அஞ்சனம் இட்ட அழகு விழியுருட்டி
அஞ்சனம் நீக்குவாள் ஆதிசக்தி ! - நெஞ்சேநீ
கஞ்ச மகற்றிக் கழலினைப் பற்றியே
கஞ்ச மலர்களைத் தூவு ..
( அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை
அஞ்சனம் - ஆணவமலம்
கஞ்சம் - வஞ்சனை
கஞ்சம் - தாமரை )