இயற்கை
அகவை அழகும்
இணையும் முரண்...
பனியும் பாலையும்
படர்ந்த உயிர்...
கொடுத்து காத்து
அழிக்கும் எங்கும்
நிறைந்த உரு...
உயிர்களின் உயிர்...
இரண்டாம் கருவறை...
தாய் தந்தை
ஆசான் போலும்...
பயணம் இனிக்க
இணையும் தோழன்...
மழழை சிரிப்பும்
மரண வலியும்
வாழ்வின் வழியாய்
வகுத்த முரணும்...
இறுதி வரை
இருக்கும் இயற்கை...