ஏழ்மையின் எதிர்பார்ப்பு••• Author dn
![](https://eluthu.com/images/loading.gif)
கொடியது இளமையில் வறுமை
கொடியதென தொண்டை கிழிய
ஆவி போக பாடி ஆவியை விட்டுக்
கொண்டாள் ஔவை எனும் மூதாட்டி
துள்ளிக் குதிக்கின்ற
பிள்ளை பருவத்திலே
கல்வி பயில்விக்க ஒரு
சல்லிக் காசில்லை எள்ளி
நகையாடும் உறவுகளே
ஏழ்மையின் எதிர்பார்ப்பு
செல்லுபடியாகிடுமோ
அப்பூங்கொத்துகளின்
உள்ளங்களில் ஏழ்மை என்ற
முள்ளை வைத்து தைத்தல்
அதைவிடக்கொடுமை
உடுத்தி அழகுபார்க்க
இடுப்பு சோமத்தால்
சட்டை கால் சட்டை
ஊசி நூல் கொண்டு
கையால் தைத்து உடுத்தி
அழகு பார்க்கும் அவலம்
ஏழ்மையின் எதிர்பார்ப்பு
ஒரு பக்கம் இல்லாமலில்லை
ஒரு சுற்று சேலையை
உடம்பை மறைத்திருக்க
ஒரு சுற்று சேலையை
கசக்கி காய்ந்தப் பின் அச்
சுற்றைக் கட்டிக் கொண்டு
மறுச்சுற்றை துவைத்து அது
காய்ந்தப்பின் உடுக்க
ஏழ்மையின் எதிர்பார்ப்பு
துயருற மட்டுந்தானா
ஏழைமையின் இடத்தில்
செல்வந்தரை வைத்துப்பார்
அவர்கள் ஏழையாகிடுவர்
அதனால் இங்கே உதவும்
பேர்களுக்கு கூட பஞ்சம்
இலவசம் என்று ஒன்று
இருப்பதனால் ஏழையரின்
வண்டியே ஓடுகின்றது
இல்லையெனில் பிணக்
காடே காணக் கிடைக்கும்
என்பது செல்வந்தரின்
தவறான கணிப்பாகும்
ஏழ்மையின் எதிர்பார்ப்பு
இலவசத்தை நம்பியில்லை
இலவசம் தான் ஏழ்மையை
நம்பியிருக்கிறது அறியீரோ