பிறந்தது இன்னொரு கவிதை

என்னவள் கேட்டால்
ஒரு கவிதை சொல் என்று
கவிதையா ஓரிடத்தில் ஒரு கவிதை எதற்கு?
கவிதைக்கு கவிதை சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை என்றேன்
நாணமாய் நகைத்தாள்
மிண்டும் அதட்டினால்
சொல்
சொல்லிவிட எனக்கும் ஆசைதான்
உன் புன்னகைக்கு நிகராய்
உன் செவ்விதழ் கனிகளுக்கு சுவையாய்
துள்ளி கொள்ளும் விழிகளுக்கு எதிராய்
சொற்கள் படையெடுக்க நாணிப் பதுங்குதடி
பிறகெப்படி கவிதை புனைவேன்.
மீண்டும் வீசினால் புன்னகை
இல்லை இல்லை
பிறந்தது இன்னொரு கவிதை
என் கவிதையின் பிறப்பிடம் உன் கண்கள்
அதன் சிறப்பிடம் உன் வாசிப்பின் இதழ்கள்
அதன் இருப்பிடம் என்றும் உன் உள்ளம்

வேறென்ன இருந்துவிடப்போகிறது என் எழுத்துகளுக்கான மதிப்பு

எழுதியவர் : இளங்கோவன் (20-Jul-16, 7:45 pm)
பார்வை : 167

மேலே