​சங்கத்தில் காணாத கவிதை

தாலாட்டுப் பாடுபவள் தாயானால் - எனை
தாலாட்டி சீராட்டுபவள் நீயாரோ ..​
​பாராட்டிப் பாடிடும் உன் மடியில் நானும்
​தலைசாய்த்து ரசிப்பதும் ஏனோ ...
என்னையும் தாலாட்டி பாடிடும் சீமாட்டி
இதயத்தை ஈர்த்தவளே நீயாரோ ....

கயல்விழி கொண்ட கமலமே
உரைக்கிறேன் நானும் ஓர் உண்மை
தங்கச்சிலை தானே நீ என் விழிகளுக்கு
மறுத்தாலும் நம்புவார் எவரும் இல்லை
உன்னிடம் தஞ்சம் ...
இனிநாம் மஞ்சத்தில் ....
கற்போம் கலைநூறு வடிப்போம் கவிநூறு
காவியம் படைப்போம் இணைந்தே நாம்
காதலின் துணைக்கொண்டு .....

பரிமாற்றம் நடக்கட்டும் நம்முள்
அகத்தின் ஆழத்தை அறிவோம்
அன்பால் அளவின்றி ...
உணர்வின் உச்சத்தைத் தொடுவோம்
உணவின்றி ...
உறக்கமின்றி ...
சம்மதத்தை அறிவித்திடு படபடக்கும்
உந்தன் இமைகளால் உடனடியாய் ....

யோசனை ஏன் வாசமிகு மேனியாளே
கலைத்திடு மௌனத்தை ஓவியமே
களைந்திடு அச்சத்தை அடியோடு ..
தொடுவோம் இன்பத்தின் இமயத்தை
காதலெனும் படி வழியே ...
வைரத்தின் வடிவழகே ...
சொப்பனத்தில் சொக்க வைத்தாய்
சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றாய்
என்னையும் தாலாட்டி பாடிடும் சீமாட்டி
இதயத்தை ஈர்த்தவளே நீயாரோ ...


( ஆட்டோ ராஜா என்ற படத்தில் இளையராஜா இசையில்
வெளியான " சங்கத்தில் காணாத உன் கவிதை "
என்ற பாடலின் அதே மெட்டில் எழுதியது . )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Aug-16, 2:31 pm)
பார்வை : 193

மேலே