உயிர் எழுந்து வா -2

உயிர் எழுந்து வா....
சூரியனை சுட்டெரிக்கும்
வெப்பம் உன்னுள் இருக்க
உயிர் எழுந்து வா....
பனிமலையும் உருகுகிறது
கடல் மட்டம் உயருகிறது
உன்னால்..
உயிர் எழுந்து வா....
பூக்கள் எல்லாம் பெண் தலையில் வைத்து
முட்கள் எல்லாம் உன் நாவில் தைத்து
உயிர் எழுந்து வா....
சுயநலத்தோடு அழைக்கின்றேன்
பொதுநலத்திற்காக
உயிர் எழுந்து வா....
சொர்கத்திலும் அடிமையா
உயிர் எழுந்து வா....
நரகத்தில் அரசனாய் வாழலாம்....!
உயிர் எழுந்து வா....
வைரமும் கல் தான்
கருங்கலும் கல் தான்
எந்த வைரக்களாலும்
சிலை செதுக்கவதில்லை - இறைவனாக
புரிந்துகொள்....
உயிர் எழுந்து வா....
பறவையல்லாம் மழைக்கு பயந்து ஒதுங்கும்
பருந்தோ மலை மேகத்திற்கு மேல் பருந்து செல்லும்
பருந்தை போல் பறக்கும் மனதை கொண்டு வா
உயிர் எழுந்து வா....
முடிந்தால் முயற்சி எடு
முயற்சித்தால் முடித்து விடு
முடித்தால் ஆரம்பித்து விடு
புதிய முயற்சியை.....
வேதனைக்கு வேதனை கொடு
சோகத்துக்கு சோகம் கொடு
கண்ணீரையும்
கற்பூரமாக்கி
கரைசேரலாம் ....
உயிர் எழுந்து வா....
-ஜ.கு.பாலாஜி-