கருவறையில் சுமந்து
கொஞ்சி கொஞ்சி நடக்கும்
குழந்தையின் பிஞ்சு நடை...
பள்ளி செல்லும் பருவத்தில்
வெற்றி பெற தோன்றும்
போட்டிக்கான நடை...
அஞ்சி அஞ்சி நடக்கும்
பழங்கால மணப்பெண் நடை..
அடி மேல் அடி எடுத்தது வைக்கும்
கர்ப்பிணியின் நடை...
கருவறையில் சுமந்து
உலக அறைக்கு மழலையை கொணர்ந்த பின்
தளர் நடை...
காலம் முழுவதும்
பாரம் சுமந்து இறுதி காலத்தை
எட்டி விட்ட மூதாட்டியின்
தடுமாறும் நடை...
அனைத்தும் எனது பொருள்
என்ற திமிரின்
ஆணவ நடை...
என்னை தவிர எவரையும்
தலைவனாக ஏற்க கூடாது என்ற
அரசியல் சாணக்கிய நடை...
என மனித பிறவிகளின்
எத்தனையோ பாதங்களில்
எத்தனையோ நடைகளை
படைத்த ஆண்டவன்
அதில் ஓர் கரும் புள்ளி வைத்தது போல
போலியோ அரக்கனின் கொடும் பிடியில்
சிக்க வைத்து
ஏன் ஊனமான நடையை படைத்தான்??