காதலித்தேன்
அன்பே
ஒருநாளும் உன்னை
நதியாக நினைத்தது இல்லை
இருந்தும் உன் பின்னால்
பாய்கிறேன்!
ஒருபோதும் உன்னை கடலாக
நினைத்தது இல்லை
இருந்தாலும் உன் நினைவுகளால்
அலைகளாக காட்சியளிக்கின்றேன்,
காற்றைப்போல் உன்னை
ஒரு நாளும் நினைக்கவில்லை!
இருந்தும்
நீயே என் சுவாசமாக இருக்கின்றாய்!
மழையாக உன்னை ஒருநாளும்
நினைக்கவில்லை!
ஆனால்
உன் விழி என்னும் குடையை
அடைய நினைக்கின்றேன்,
வெறுப்பில் கூட வெயிலில் நின்றது
இல்லை
இருந்தும் உன் நிழலை
தேடுகின்றேன்!,
உன்னை ஒருநாளும் என் உயிராக
நினைக்கவில்லை
இருந்தும்
என் இதயம் உனக்காக துடிக்கின்றது,
உன்னை ஒருநாளும்
நேரமாக நினைக்கவில்லை!
ஆனால்
என் நிமிடங்கள் எல்லாம் உனக்காக
காத்துக் கொண்டிருக்கின்றது!!,
இரவாக உன்னை இன்று வரையும்
எண்ணவில்லை இருந்தும்
என் கனவுகள் உனக்காக
கண்விழிக்கின்றன!,
உன்னை ஒருநாளும்
பாதைகளாக பார்க்கவில்லை!
ஆனால்
என் பயணங்கள் எல்லாம்
உன்னுடன் போகவேண்டும் என்று
நினைக்கிறேன்!,
கண்ணில்லா காதலையும்
காண நினைக்கின்றேன்!
கண்ணே
உன் கண்களை கண்ட பின்,
உயிரில்லா காதலுக்கும்
உயிர் கொடுக்க நினைக்கிறேன்!
உயிரே உன்னை
காதலிக்க நினைத்த பின்............
....................................................