வயலில் ஒரு கானம்

கிழக்கு சிவந்து செந்நெல்லும் அசைந்து ஆடுதே
மேற்கில் கறுத்து குயிலதுவும் கூச்சல் போடுதே
வடக்கே செவ்வந்தி மலர்ந்து வாசம் வீசுகின்றதே
தெற்கில் வரும் தென்றலில் தேகம் சிலிர்க்கின்றதே......


மழையில் நனைந்து சோலையில் மயில்தோகை விரியுமே
காலையில் குளத்தில் செங்கமலம் ஆளையும் அசத்துமே
மாலையில் கூந்தலின் மல்லிகை மனதை மயக்குமே
பட்டாம் பூச்சியின் வண்ணங்களாய் வாழ்வும் மாறுமே.....


செல்கின்ற பாதையில் பனிப்புல்லோடு பாதங்கள் பேசுமே
நிழலின் மடியில் உறவுகள் நிம்மதியாய் வாழுமே
நினைத்து பார்த்தாலே நெஞ்சில் தேனாறும் பாயுதே
கானலாய் எல்லாம் மறைவதால் இதயம் வாடுதே......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Mar-17, 8:52 pm)
Tanglish : vayalil oru kaanam
பார்வை : 245

மேலே