தலை நிமிர் தமிழா
சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !
காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !
மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !
பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !
உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !