கலக்கமா மயக்கமா
தோழா!
வாழ்க்கை
வேதனைகளின்
சோதனைகளில்
சோர்ந்துப் போகாதே...
சோர்ந்துப் போவதால்
சோதனைகளும்
நீர்த்துப் போகாதே...
காய்க்கும் மரங்களைத்தான்
கற்கள் தாக்கும்.
பூக்கும் செடிகளைத்தான்
பூச்சிகள் தாக்கும்.
வலிகள் பொறுக்கும்
பொருப்புகளைத்தான்
உளிகள் தாக்கும்.
தாக்கிகள் எல்லாம் உன்னை
உலகறிய செய்யும் ஊக்கிகள்.
நீர்போல் வளைந்து செல்.
ஏற்றமிறக்கம் அறிந்து நுழைந்து செல்.
இதுதான் இயற்கை - இயற்கைவழி
வாழ்வது வாழ்க்கை.