முக்தி வேண்டி

திரண்டு வருவது மேகமோ?
காரிருள் கப்பிடவே கனநேர கானல்நீர் யாகமோ?
தேன் சொட்டுக் கவிதையோ?
என்னை மயக்குவிக்கும் இயற்கையின் விதியோ?
உலகின் விதிகளுக்குக் கட்டுப்படாத குணமாய் என்னைப் படைத்த அருளோ?
வந்தென்னைக் கொல்லும் விஷமோ?
ஏனிந்த மாயை சிவமே...
என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்ளும் சிவமே...
பொருள் தேடும் உலகிலே
உன் அருளைத் தேடியே அனுதினமும் எழுதுகிறேன் நானும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Aug-17, 10:16 pm)
Tanglish : mukthi venti
பார்வை : 209

மேலே