இரயில் பயணங்களில்

தொடர்வண்டி சக்கரங்களின் எண்ணிக்கையை மிகைத்திருந்தது,
அந்த இரும்பு கூண்டுக்குள் பொதியப்பட்ட மனிதர்களின் உயிர் சடலங்கள்..
இருக்கையை தக்க வைக்க முகத்தை கடுகடுப்பாக்கி கொண்டு பயணித்தது,
அந்த உம்மணாமூஞ்சி பயணிகள் கூட்டங்கள்..
தண்டவாளத்தின் இருபுறமும் தின்று எறிந்த சாப்பாட்டு கழிவுகளின் துர்நாற்றம்,
தொண்டைக்கு கீழிறங்கிய அறுசுவை பதார்த்தங்களை,
வெளியேற்ற துரத்தி கொண்டிருந்தது.
சுழலும் சக்கரத்தின் தடக் தடக் சப்தத்தை மிஞ்சி,
அலைபேசியில் பேசிய யுவதியின் குழைவான பேச்சு காதை நாண செய்திருந்தது..
அறையிலிருந்த ஒவ்வொருவரையும் பதட்ட பட வைத்திருந்தது,
பசியிலிருந்த ஒரு சிசுவின் அழுகை சப்தம்..
டீ,காபி,இட்லி என கூவியவாரே அங்கும் இங்கும் நடந்தவாறு,
பிறர் பசியில் தன் வாழ்கை சக்கரத்தை ஒட்டி கொண்டிருந்தனர் சில வியாபாரிகள்..
வேலை விஷயமோ,தெரியாத ஊருக்கு போறமோ என்ற எண்ணத்தில்,
கலவர ரேகையும் கவலை ரேகையும் ஒன்றாய் முகத்தில் ஒத்திகை செய்தவாரு சில ஆடவரின் முழிப்புகள்..
ஒரு திருநங்கையின் வளையல் சப்தம்,
ஒரு மாற்று திறனாளியின் புல்லாங்குழல் இசை சப்தம்,
ஒரு குழந்தையின் விசும்பல் சப்தம்,
அதோடு பயணித்து கொண்டிருந்தது என் வெறுமையான இரவுகளும்...

எழுதியவர் : சையது சேக் (7-Sep-17, 4:28 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : irayil payanangalil
பார்வை : 115

மேலே