உப்பைப் போல
சமையலில் சேர்க்கப்படும்
உப்பைப் போலத்தான்
இதயத்தில் கொஞ்சம்
கொஞ்சமாய் சேர்ந்துவிடும்
காதலும்
இது இருக்கும்
இதயங்கள் இதமாய்
ஒரு ரதமாய்
எங்கோ பறந்தபடி
இது இல்லாத
இதயங்கள் எல்லாம்
எதுவும் இல்லாத
சப்பென ஒரு
குப்பையைப்போல
ஒரு ஓரத்தில்
எங்கோ தூரத்தில்
கரண்டியைப் போல
உன் கண்கள்!
எனக்குள் காதலை
கொஞ்சம் கொஞ்சமாய்
தூவிச் செல்கிறது
உன் தூவல்
கொஞ்சம் மிஞ்சினாலும்
அது நஞ்சாய்
மாறித்தான்
என்னைக் கொல்லவும்
செய்கிறது கண்ணே
விழுங்கவும் முடியாமல்
ஒதுக்கவும் முடியாமல்
உன்னைப் பார்த்துக்
கொண்டிருக்கும் நான் !
உன் உப்பு தூக்கலாக ஏறி
அது எனக்குள் தாக்கமாக மாறி
இது எப்போதும் ஏக்கமாக மாறி
விழி தொலைத்த தூக்கமாக மாறி
வழி மாறிய
ஆட்டுக் குட்டியாய்
உன் பாதைகளை
தேடியபடி அலைகிறேன்