காதலும் நானும்
"காதல்" இந்த வார்த்தை கேட்டவுடன்
என்னுள் உள்ள அவன் நினைவுகளும்
என் இதழில் பூக்கும் சிறு புன்னகையும்
என் கண்கள் சிந்தும் துளி கண்ணீரும்
என் இதயம் துடிக்கும் ஓசையும்
விளக்கி விட்டு செல்லும் அதன் அர்தத்தை
உன்னிடம் மண்டியிட்டு மன்றாடும் என் வார்த்தைகளை
நீ கேட்கமால் கொலை செய்வது ஏன்?
சொல்ல முடியாத வார்த்தைகளையும்
வெளிக்காட்ட முடியாத கோபங்களையும்
கொண்டு நான் பேசும் மொழி என் கண்ணீர்
பொங்கும் என் புன்னகைகளையும்
சேர்த்து வைத்த சின்ன சின்ன ஆசைகளையும்
கொண்டு நான் வடித்த சிலை என் காதலன்
கேட்கப்படாத என் குமுறல்களையும்
அழிக்கப்பட்ட என் ஆசைகளையும்
கொண்டு நான் அமைத்தது என் தனிமை
அவனால் ஒதுக்கப்பட்ட நானும்
என்னால் மறுக்கப்பட்ட அவன் முடிவும்
கொண்டு நான் எழுதப்போவது என் முடிவுரை
விட்டு கொடுக்க முடியாத ஒரு சில உணர்வுகளும்
விடை கொடுக்க முடியாத ஒரு சில உறவுகளும்
கொண்டு நான் தொடர்வது என் வாழ்க்கை
ஏற்க முடியாத ஏமாற்றங்களையும்
தாங்க முடியாத வலிகளையும்
கொண்டு நான் மாற்றிய உருவம் நான் ...