குப்பைத்தொட்டி குழந்தைகள் நாங்கள்
இச்சைத் தணிக்க இணைந்த மிருகமே
பிச்சை எடுக்க வைத்தது முறையோ!
குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு
குதுகலித்து சென்றாயோ, எங்களை விட்டு.
உங்கள் வயிற்றில் பிறந்தது தப்பா !
உண்மையில் யாரென்று தெரியாது அப்பா !
விட்டெறிந்த காரணம் நிறமெனது கருப்பா !
காமத்துக்காக பிறந்த கழிவு என்ற நினைப்பா !
குப்பைத் தொட்டித்தான் எங்கள் குலதெய்வமாய்.
குடிசை இல்லை வாழ்கிறோம் சாலையோரமாய்.
யாருக்குமே நாங்கள் இல்லை ஒரு பாரமாய்
இருந்தும் எங்கள் நிலையோ படுமோசமாய்
எந்திர உலகத்தில், நாங்கள் எட்டும் தூரத்தில்.
என்றிந்த நிலை மாறும், இருக்கின்றோம் சோகத்தில்.
பசிதீர்ந்தால் போதுமென, ஏங்குகின்றோம் ஏக்கத்தில்.
பாவப்பட்ட உலகத்திலே,பரிதவிக்கின்றோம் துக்கத்தில்...