பாதிக்கப்பட்டவள் கையில்

அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு
உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு!
.
உன் பத்து நிமிட ஆசைக்காக
உயிர்எடுத்தது ஏனோ?
.
பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே
என் பார்வதிக்கு!
.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்
பார்க்கதானா? அட மிருகமே!
.
விலைமகள் ஆயிரம் இருக்க
என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ?
.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!
காமவலிதந்து சிதைத்தது ஏனோ?
.
அட காமவெறியனே! உன் குடிபோதை
என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது!
.
ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும் சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலை
வெறும் சிலைஆனது ஏனோ?
.
பண்பாடோடு வாழும் தமிழகமே!
என் பெண்படும் பாடு புரியலையோ?
.
பூமியையே வயிற்றில் சுமக்கும் பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்
உன் கர்ப்பமே களைவதுபோல் உணரலையோ?
.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும் விட்டு வைத்தது ஏனோ?
.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்
என் மகளை காமஅரக்கன் அல்லவா தீண்டிவிட்டான்!
.
நீதியின் குலமகளே!
ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்
கற்பழிந்து கிடப்பதை பார்
.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன் கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின் கருப்பு பணமா?
.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்க தவறியது ஏனோ?
ஓர் வேளை.....
உன் கற்பை காத்துகொள்ள ஒளிந்து கொண்டாயோ..?
.
பெற்ற வயுறு பற்றி எரிகிறது
என் மகளுடய உடலுடன் சேர்ந்து...
.
பெண்களிடம்....
வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்த சமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?
.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காம தாகத்தை...!
.
வாங்கி சேர்க்காதே பெண்களின் சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம் இந்த உலகத்தை...!
.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!!
C வித்யா

எழுதியவர் : வித்யா C (22-Dec-17, 11:37 pm)
பார்வை : 190

மேலே