கடமையாற்ற புறப்படு உணர்வுடனே

​வந்தாரை வரவேற்ற தமிழன்
​வாழவைத்து தாங்கி நிற்கிறான்
​மாற்றானை மடியில் ஏந்துகிறான்
​தூற்றினாலும் தூக்கிப் பிடிக்கிறான் ​!

கொள்கையிலா பித்தனும் இன்று
கொடியேற்றத் துடிக்கிறான் இங்கு
​இனப்பற்று இளைப்பாறும் சூழலில்
​கதியற்ற நிலையன்றோ நிலவுது !

மதவெறி உச்சத்தில் இருப்பதால்
​மதசார்பு மமதையில் குதிக்கிறது
சாதிக்கொரு சங்கம் என்பதானது
சாலைக்கொரு கட்சி என்றானது !

சுயநலம் கொன்றது பொதுநலத்தை
தத்தளிக்குது தன்மானம் தமிழகத்தில் !
அந்தப்புரமாய் மாறுது ஆசிரமங்கள் ​
எந்தப்புறமும் எதிர்கால ஏக்கங்கள் !

கனவுலகில் சஞ்சரிக்கும் தமிழனே
கடமையாற்ற புறப்படு உணர்வுடனே !
தலைமுறை வாழ்ந்திட வழிவகுத்து
நடைமுறை பகுத்தறிந்து செயலாற்று !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Feb-18, 7:46 am)
பார்வை : 754

மேலே