அன்பே சிவம் ஜெயந்திராஜவேல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

ஜெயந்தி
உன் பிறந்த நாள்தான்
ராஜவேலுவிற்கு
காந்தி ஜெயந்தி

நீ வாசனை ஈன்ற
வாசனை
குணாளனை ஈன்ற
குணவதி

நீ கவிதை
எழுதும் கவிதை
கேசவவன் விதைத்த விதை

நீ கடலூர்
கண்டெடுத்தத் தமிழ்க்கடல்
மஞ்சள்குப்பத்தில் பிறந்த
மஞ்சள் ஆறு

உனைப் பெற்ற நாயகி
தையல் நாயகி
நீயோ
தையல் விட்ட ஏழைகளின்
வாழ்வை அன்பே சிவம்
எனும் நூல் கொண்டு
தைக்கும் நாயகி

உன் வாய் கொண்ட மை வாய்மை
உன் தாய் கொண்ட மை பெருமை

உன் மனம் கொண்ட மை வலிமை
உன் குணம் கொண்ட மை எளிமை

உன் மூளை கொண்ட மை கூர்மை
உன் வேலை கொண்ட மை நேர்மை

நீ செயலுக்கு பூசிய மை திறமை
நீ செலவிற்கு பூசிய மை வளமை

உன் மெய்க்கு பூசிய மை உண்மை
உன் கைக்கு பூசிய மை தூய்மை

உன்னுள் இத்தனை மேண்மை கண்டு
சிலிர்க்கிறது என் மெய்

பாரதி உன்னைக்
கண்டிருந்தால்
உன்னை பா ரதி என்றிருப்பான்
கம்பன் உன்னைக்
கண்டிருந்தால்
நீ என் பெண் என்றிருப்பான்

அனைவரையும் அன்பால்
ஈர்த்துவிட்டாய் உன்பால்

நீ ஈகையினை
இரு கைகளாய்க்
கொண்டவர்
அதனால் வாகையினை
செல்லுமிடமெல்லாம்
கண்டவர்
உன் இருக்கையினை
சட்டமன்றத்தில்
செய்துவைத்துள்ளார்
ஆண்டவர்

உன் கை குட்டையானது
ஏழைகள் கண்ணீர் துடைப்பதில்
கைக்குட்டையானது

பெயர் மட்டும் ஜெயந்தி
செயல் எல்லாம் தீ

உன்னால் வாழ்கிறான் ஒரு ஏழை
நீ ஏழைகள் வாழப் பிறந்த வாழை

இந்தியப் பெருங்கடலாய்
உன் புகழ் நீண்டிருக்கட்டும்
இவுலகை ஆண்டிருக்கட்டும்
அச்சாரமாய் இந்த ஆண்டிருக்கட்டும்

இனிய நட்பிற்கோ
இன்று பிறந்தநாள்
எனக்கோ இது சிறந்தநாள்

இனிய நட்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (24-Apr-18, 11:30 pm)
பார்வை : 117

மேலே