கணவன்

வெய்யோன் உதிக்கவே
தினமும் நாள் மலரும்
அனால் என் நாளோ
என் தந்தை தரும்
நெற்றி முத்தத்தில்
மீசை குற்றியே உதிக்கும்...
முகம் கழுவி
கண்களை திறக்கவே
கையில் ஆவியுடன்
கொட்டை வடிநீருடன்
கண்ணத்தில் முத்தம்
பதித்தல் நின்றாள் என் தாய்..
வாழ்வின் ஆதாரமாய்
என் வாழ்க்கையின்
சந்திரனும் சூரியனுமாய்
என் தாயும் தந்தையும்
இவர்களை பிரிய மனமில்லாமல்
பிரிவினால் ஏற்படும் ஒரே
சந்தோஷ தருணமாய் நிகழ்வதே
திருமணம் தான்....
என்னவன் தரும் நெற்றி முத்தத்தில்
என் இரண்டம் தந்தையானான்...
மடி மீது தலை வைத்து என்
அன்னை மார்முட்டி படுத்த
பல பகலும், உறங்கும் போதும்
என் தலைகோதியே தூங்கியே என்
தாயையும் உன் மடிமீது
தலை சாய்க்கையில் கண்டேனடா
என் தாயுமானவா..
என் முதல் குழந்தையும் நீயே..
உன் கண்டிப்பின்போது
என் தந்தையை கண்டேன்..
நீ ஊட்டும் பொது
என் தாயை கண்டேன்...
என் வாழ்வின்
மொத உருவமே நீயடா
என் உயிரே
என் காதல் கணவா....

எழுதியவர் : தாரா (தாரணி ராஜாராம் ) (13-Jul-18, 1:01 pm)
Tanglish : kanavan
பார்வை : 394

மேலே