கர்ம வீரரே காமராசரே

கர்ம வீரரே காமராசரே
மக்களின் நலன் கருதியே
கல்விக்கு கண் கொடுத்தவரே
பசியோடு படித்தால் ஒன்றும் ஒட்டாதென்று மதிய உணவு கொண்டு வந்தவரே
காமாச்சி என்று இயற்பெயர் பெற்று ராசா என்று செல்லமாக அழைக்கப்பட்டு இந்நாட்டிற்கே சிறந்த ராசா ஆனவரே
இனி ஒரு போதும் உன்னை போல் தலைவன் பிறக்கபோவதில்லை
பிறந்தாலும் உன்னைப் போல் வாழப்போவதில்லை
காமராசரே எல்லோர் மனதிலும் ராசாவாய் இன்றும் வாழ்பவரே
நீ யாருக்கும் அஞ்சியதில்லை
ஏனென்றால் உனது அஞ்சா துணிவு
உனது நேர்மை உனக்கு பயம் கொடுத்ததில்லை
நீ மக்களின் நலனே சிறந்ததென்று வாழ்ந்தாய்
தனக்கென்று ஒரு வீடில்லை இந்நாடே தன் வீடென்று வாழ்ந்தாய்
எளிமையின் தனித்துவமே நீ தானே
சொத்து என்றும் உன்னிடம் இருந்ததில்லை
மக்களின் அன்பே உனது சொத்தானதூ
வள்ளுவன் சொன்ன வார்த்தைக்கு இலக்கணமானவரே நீ தான்
உனது வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக்கி போய்விட்டாய்
மீண்டும் உன் போல் ஆட்சி செய்ய இங்கு யாருமில்லையே
நன்மை செய்திட இன்னும் இங்கில்லையே
கர்மவீரரே காமராசரே
உன் வாழ்க்கையை படித்தேனும்
நாங்கள் திருந்த
முயல்கிறோம் ஐயா !!!!
கல்விக்கு கண் கொடுத்தவரும் நீ தான் உயிர் ஊட்டியவரும் நீ தான்
பசிப்பிணி போக்கியவரும் நீ தான்
தொழில் வளர்ந்திட அரும்பாடு பட்டவரும் நீ தான்
உழவு செழித்திட பல அணைகள் கட்டியவரும் நீ தான்
இம்மண்ணில் சாயும் வரை மக்களை
நினைத்தவரும் நீ தான்
உனக்கென்று என்றும் வாழ்ந்ததில்லை
பிறருக்காக வாழ்ந்து மடிந்தாய்
உனது செயல்கள் அளவுகற்றது
சொல்ல வார்த்தையில்லை
நன்றிகளோடு என்றும் எண்ணிப்பார்ப்போம்
கர்மவீரரே காமராசரே

எழுதியவர் : பிரகதி (15-Jul-18, 10:53 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 917

மேலே