செல்வந்தனே

ஒன்றுமில்லாதவனாய் பிறந்தாய்
குழந்தை பருவத்தில் குதித்து விளையாடினாய்
இளமை பருவத்தில் கல்விகள் கற்றாய்
குடும்பத்திற்க்காக தொழில்கள் செய்து வருமானம் ஈட்டுவதையே வாழ்க்கையாக்கினாய்
பணத்தாசையால் பாசத்தை மறந்து பாலூட்டியவளுக்கு கொடுக்க கூட கணக்கு பார்த்தாய்
ஏழையான உடன்பிறப்புக்கோ உதவாமல் எட்டி உதைத்தாய்
ஆசையில் பல அடுக்குமாடிகளை கட்டினாய்
ஆபரணங்கள் அனைத்தையும் வாங்கி செல்வந்தனாய் வாழ்ந்தாய்
மரணம் வரும்போது நீ மடியிலே கொண்டு செல்ல போவது சேர்த்து வைத்த சொத்துக்களையா
உன் நெற்றியில் ஒட்டப்படும் ஒருரூபாய் கூட உன்னோடு வரப்போவதில்லை
சிந்தித்து பார் செல்வந்தனே
நீ கண்ணுக்கு தெரியாத ஏழைக்கு கூட இரங்க வேண்டாம்
உன் கண்ணெதிரே கஷ்டப்படும் உடன்பிறப்புக்கு உதவு
செல்வம் மேல் செல்வம் சேர கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதை விடுத்து
பெற்றேடுத்த தெய்வத்திற்கு பேரின்பத்தை கொடு
சுநலமாய் மரித்த மனிதர்கள் பட்டியலில் இடம்பெறாமல்
வள்ளலாய் வாழ்ந்தவர் என வாழ்க்கை முழுவதும்
நினைப்பவர் பட்டியலில் நீயும் இடம்பெறு!!!

எழுதியவர் : M Chermalatha (28-Jul-18, 7:36 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 245

மேலே