அழகிய மலரே அழகிய தமிழே
அழகிய மலரே அழகிய தமிழே
எப்படி பூத்தாயோ ?
நீ என்றும் வாடியதில்லை
நீ என்றும் அரும்பிய மலராய்
பல வண்ணங்கள் கொண்ட அழகிய மலராய்
என்றும் நீ இளமையுடன் இருப்பாய்
என் உயிர் என இருக்கும் என் தாய் மொழியே
நீ மொட்டு அரும்பினாய் மலர்ந்தாய் விதை கூட தூவி விட்டாய்
என்றும் நீ வாடமாட்டாய்
நீ உத்திரத்தினுள் பிறந்தவள்
இயற்கையின் மடியில் தவழ்ந்தவள்
இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தம் கொண்டாடிட வந்தவள்
ஆதியும் நீ தான் அந்தமும் நீ தான்
விடை தெரியாமல் விழிக்கும் நாங்கள்
தமிழ் தமிழ் என்று கூப்பாடு போட்டு உன்னை காக்க மறக்கின்றோமோ
உன்னை கண்டால் ஊக்கம் பிறந்திடுமே
உன்னையே சோர்வாக்கிட செய்யும் இந்த உலகினை என தன கூறுவதோ
தமிழே உன்னை கற்று வீழ்ந்ததில்லை
வீழ்ந்தவன் கூட எழுந்து நடப்பான்
மாய்ந்தவன் கூட உன்னை கற்க மீண்டும் பிறப்பு எடுப்பான்
தமிழே இன்னும் நாங்கள் உறங்கிவிடவில்லை
மீண்டும் எழுவோம் உன்னை தாலாட்டிட
உன்னை மீண்டும் புதுப்பித்திட
எங்கள் பழமையை காத்திட
எங்கள் முன்னோரை சேமித்து வைத்த கருவூலம் காத்திட
எங்களை தலை நிமிர செய்தாய் நீ
உன்னை ஒரு போதும் தலை குனிய வைக்க மாட்டோம்
அழகிய மலரே அழகிய தமிழே
அரும்பிய மலரே
கனிந்தும் எங்கள் இளவரசியாய் உலகம் முழுக்க வளம் வருபவளே
நீ எல்லோருக்கும் இன்றும் புதிராய் விளங்குகின்றாய்
ஆனால் எல்லாம் உள்ளடைக்கி இருக்கின்றாய்
நீ மீண்டும் பவனி வர நான் உன்னை போற்றுவேனே
அழகிய மலரே முதன் மொழியே
தாய் மொழியே தமிழ் மொழியே
வாழிய வாழியவே