ஆணியின் காதல்
ஆணியின் காதல்...
உன் தாவணி முந்தானையில்
என்னை தாக்கி சென்றவளே...
நான் கிழித்த உன் தாவணி
நுனியை உன் இதழ் நுனியால்
சரி செய்கிறாய்...
துப்பட்டாவிற்கு வந்த வெண்ணிலவே
உன் துப்பட்டாவின் நுனியில்
நான் மாட்டி தவிக்கிறேன்...
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் கைகள் எனை தீண்ட...
என் உயிர் உருகும் ரசவாதம்
நான் வேண்டி காத்திருக்கிறேன்...