அன்பென்ற தீபம் ஏற்று

மெலியாரை வதைக்கும் வலியாரே,
சிற்றாரைக் கொல்லும் பெற்றாரே,
காலம் அனைத்திற்கும் சாட்சியாக உங்கள் மனம் விழித்தெழும் நேரம் எங்கே சென்று முறையிடுவீர்கள்?

முறையிட வேண்டுமென்றே இறைவனைத் தேடினால் இறைவனும் கண்ணில் புலப்பட மாட்டான்,
பக்தி, முக்தி என்று பஜனை செய்தாலும் பாவக்கடல் வீழ்ந்தார்
பக்தியேது? முக்தியேது?
விழித்தெழ சக்தியேது?

சக்தியேது நம்மைத் தடுக்கவென்றே நாமும் ஆட்டமிடலாம்,
கூட்டி கழித்தே கணக்கை சரிபார்க்க இயற்கையும் நமக்கெதிராய் சூளுரைக்க, நீயும் நானும் என்ன செய்ய முடியும்?

முடியுமென்றே ஓடினால் உலகின் எல்லையே முடிந்துவிடும்,
வேறெங்கு ஓடி ஒழிய முடியும்?
இரகசியம் என்றிட எதுமில்லை என்னும் ஒளிவு மறைவு நமக்குள் ஏது? என்று பலர் சொன்னாலும் சந்தேகம் என்ற பேய் பிடித்தால் உடலை எரித்தாலே நிம்மதியாம்.

நிம்மதி வேண்டில் கொள்ளாமை, கொல்லாமை இரண்டும் கடமையாக அன்பே இதயத்தின் இயக்கமாக கருணையோடு கழித்தாலே உடலில் வாழும் போதே ஆன்ம முக்தி அடையும்.
அன்பே உயர் பக்தி என்றிட அறியார் சொல்லுவார் அன்பென்பது வெற்றுணர்வு,
வெற்று நடிப்பென்று.
தேவையற்ற உணர்வுகளை விலகி உன் அறிவில் அன்பென்ற தீபம் ஏற்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Sep-18, 8:40 pm)
பார்வை : 806

மேலே