வழி விடு

கவிதை இன்றி
இதுவரை நான்
ஏங்கியது இல்லை
அன்பே உன்னால்
கிடைத்த பாக்கியம் அவை./

அளவு இன்றிக் காதலித்தேன்
உன்னை இல்லை
உன் தமிழ் பற்றை./

வான் அளவு உன்னை
உயர்வாக நினைத்தேன்./

நீயும் அதனால் தானோ
கை எட்டாத படியே
பிரிந்துவிட்டாய்
ஆனால் மறந்து விடாதே./

உன்னை வட்டமிடும்
நிலவாக நான்./
கண்கள் சிவக்க
அழுது முடித்து விட்டேன்./

இதழ் மலர முகம் சிவக்க
ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுக்க /
கொஞ்சம் சிரிக்க வழி விடு./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Sep-18, 7:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vazhi vidu
பார்வை : 62
மேலே