தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
#தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
முன்னம் உதித்த மொழி
முன்னோர் வளர்த்த மொழி
விரிகடலாய் இப்புவியில்
உலவுகின்ற இன்ப மொழி !
திருக்குறளில் உலகநெறி
பெருங் குரலில் பாடும் மொழி
பொது மறையாய் உலகினிலே
பவனி வரும் ராஜமொழி..!
பிறைநிலவு அணிந்தவனின்
நிறையருளைப் பெற்றோரும்
அருளிப் படைத்த தேவாரம் - திரு
வாசகத்தில் உருகும் மொழி!
இணையத்திலே கோலோச்சி
இதயமெல்லாம் வீற்றிருக்கும்
இன்னுமின்னும் வேண்டுமென - கை
ஏந்த வைக்கும் ஏற்றத் தமிழ்..!
கம்பன் கை விளையாடி
காவியம் படைக்குந்தமிழ்
வள்ளுவன் இளங்கோ மடியில்
பள்ளிகொண்ட தெள்ளுத்தமிழ்..!
பத்துப்பாட்டு எட்டுத்தொகை
தமிழன்னையவள் எழில் தோகை
நடமிடுமே இன்பம் விரித்து
காட்சி காணும் விழி விரிந்து..!
எம்மொழியுடன் எளிதெனவே
கைபிடிக்கும் பவனி வரும்
இனிய தமிழை மிஞ்சிடவே
இவ்வுலகில் மொழி இல்லை..!
இமயத்தின் உயரம் தோற்கும்
எம் தமிழோ புகழின் உச்சம்
வான் கிழித்து மேல் செல்லும்
பொன்னொத்த ஒளி கொண்டு..!
உயிருக்கு ஈடு சொல்ல
வேறேதும் புவியில் இல்லை
உயிருக்கும் மேல் தமிழாம்
உயர் வடிவாம் கடவுளைப்போல்..!
#சொ.சாந்தி