குடியரசுக் கொண்டாட்டம்

முடியரசாய் வாழ்ந்த நாம் - நமக்குள்
பிடிமானத்தில் பிணக்கு விழுந்த காரணத்தால்
கணக்கில்லா துன்பத்தில் உழன்று
கதறிய நிலையை மாற்றிய
கதர் ஆடை நூற்றி அணிந்த காந்தி மகானின்
அயராத பெரும் பாட்டால் அடைந்தோம் விடுதலை
அகிலத்தின் போற்றுதலுக்கு அகிம்சை
என்னும் பெரும் கொடையை கொடுத்தோம்
குடியரசு என்னும் கோட்பாட்டுக்கு உள்ளே
குதுகலமாய் வாழ்ந்து கொண்டாடி மகிழ்ந்தோம்
அரும்பாடுபட்டு அடைந்த சுதந்திரத்தை
என்னாலும் காத்து ஏற்றம் அடைவோம்.
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Jan-19, 12:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 97

மேலே