உழைப்பாளர்கள்

வாட்டும் வெயிலில் உதிரம் உருக
வியர்வை சிந்திடும் "வேலைக்காரர்"
அரைவயிற்று உணவோடு
அன்றாடம் விளைநிலம் சென்று
ஏருபூட்டி நாத்துநட்டு
சேறு மிதித்துச் சோறு போடும் "விவசாயி"
புயல் மழையோ பகல் இரவோ
எந்நேரமாயினும் தன்னுயிர் முன்வைத்து
பயணிகளை பாதுகாக்கும் "ஓட்டுனர்"
அறுந்தாலும் விழுந்தாலும்
ஆபத்தென அறிந்தும்
அசராது அயராது
பணிசெய்யும் "மின் ஊழியர்"
தன் சுத்தம் துறந்து
நம் சுத்தம் காக்க
நாளும் உழைக்கும் "துப்புரவாளர்"
தொழிலென்றில்லாமல் தொண்டென
நினைத்து பிறரின் பிணிபோக்கி
உயிர்காக்கும் "மருத்துவர்"
சாமானியரும் சான்றோராக
அனுதினமும் அறிவூட்டும் "ஆசிரியர்"
இப்படி எவ்வொன்றின் மூலமும்
இவ்வுலகை இயக்கி கொண்டிருக்கும்
உழைப்பாளர்களை வாழ்த்திடுவோம்...!

எழுதியவர் : அக்பர் ஷரிஃப்.kf (1-May-19, 12:03 pm)
சேர்த்தது : அக்பர்
Tanglish : uzhaipaalarkal
பார்வை : 75

மேலே