ஸ்டீவம் மில்ஹௌசர்--------------காணொளிகள், சிறுகதை, சுட்டிகள், விமர்சனம்
இன்று காலை நியூ யார்க்கர் பாட்காஸ்டில் கேட்ட கதை ஸ்டீவம் மில்ஹௌசர்
எழுதிய “In the reign of Harad IV”. நாவலாசிரியர் சிந்தியா ஒசைக் இந்த
கதையை தேர்ந்தெடுத்து வாசித்தார். புதுமைபித்தனின் சிற்பியின் நரகம்
துவங்கி அரங்கநாதனின் சித்தி அயன் ராண்டின் ஃபைண்டைன் ஹெட், இன்னும்
இன்னும் என்று தேடிக்கொண்டே இருக்கும் மோகமுள் ரங்கண்ணா, பாபு,
ஹிந்துஸ்தானி கலைஞர்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தபடியே இருந்தது கதையைக் கேட்டபொழுது…
Miniatures எனப்படும் சிறிய சிற்பங்களை செய்யும் கலைஞன் ஒருவனின் கதை
இது. கலைக்கும் கலைஞனுக்குமான உறவு என்ன, இந்த உறவில் வாசகன்/ரசிகனின்
பங்கு என்ன? ரசிகனுக்கானது கலையா அல்லது கலைஞனுக்கானதா? ஒரு வகையில் நமது பழைய சண்டையான கலை கலைக்காகவே Vs கலை மக்களுக்காகவேவை உக்கிரமாக நிகழ்த்திக்காட்டுகிறது இக்கதையின் கடைசி பத்தி. அந்த இருவரும் அறையை விட்டு சென்ற உடன் இவருக்கு தனது மிச்ச வாழ்நாள் என்னவாக இருக்க போகிறது என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை. உள்ளே ஒரு
பிசாசு இவரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது….
from now on, his life would be difficult and without forgiveness.
சிறிய கதை தான். இதன் தேவதைகதைகளையொத்த மொழி சட்டென உள்ளே
இழுத்துக்கொள்கிறது. அவனது சிற்பங்களை விவரிக்கும் இடங்களில் நல்ல
கற்பனை.
நாளுக்கு மிக நல்ல தொடக்கம். :)
கதைக்கான சுட்டிகள் :
படிக்க
கேட்க (சிந்தியா ஒசைக்கின் பேட்டியுடன்)
ஒலிக்கோப்பாக தரவிறக்கம் செய்துகொள்ள
அன்புடன் சித்தார்த்
March 8, 2011