ஆலமரம்

ஆலமரம்

என்னுடன் பயணித்தவர்கள்
ஒருவரும் இப்பொழுது இல்லை!
நான் மட்டும் நட்ட நடுவே
வயதின் மூப்பு மரியாதை
தருகிறது ! பலருக்கு
நிழல் கூட தருகிறது
என்னை வைத்தவனின்
பரமபரையும் !
வளர்த்தவர்களின் பரமபரையும் 1
தொட்டு தடவி மகிழ
அவர்க்ளின் பாட்டனை முப்பாட்டனை
தடவி பார்த்த சந்தோசம் முகத்தில் !
அத்தனையும் மறைந்து விட்ட
ஒரு நாள் ! ஆவி துறந்து
கிடக்கின்றேன் ! உடல்களை
துண்டு துண்டாய் போட்டு
நான் பிறந்த மண்ணுக்கு
கூட தராமல் குத்தகை
பேசி எடுத்து செல்கிறார்கள்
சாலை விரிவாக்கமாம் !
என் மண்ணின் குழந்தைகளுக்கு
நான் ஒரு வேடிக்கையாய்
தெரிய !
விவரம் அறிந்த
பெரியவர்களுக்கு அவர்கள் வீட்டு
இழவாய் தெரிய !
இது போதும் எனக்கு

நூற்றாண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-May-19, 11:52 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : alamaram
பார்வை : 68

மேலே