நேரம்

நேரம் ( original : "Time" -Shelley;தமிழாக்கம் - வாசவன்)
-----------

ஆழங்காணா ஆழ்கடல் ...
அலைகள் வருடங்கள் !
நேரப் பெருங்கடல் , உந்தன் நீர் துயரம் ,
காரைக்காணா வெள்ளமே , உந்தன்
வெள்ளைப்போக்கில் , இறப்பின் எல்லையைப்
பற்றி இருக்கின்றாய்
உந்தன் இறையைக் கண்டு கசந்தாலும்
இன்னும் இரைத்தேடி அலைகிறாய்,
தரிசாம் கரையில் கொட்டுகின்றாய்
வெளிக்கொணர்ந்து விழுங்கிய
சிதறல்கள் எல்லாம்
நம்பமுடியா அமைதி, புயலில் பயங்கரம்,
யார் உன்னுடன் உடன்படுவார் ,

ஆழங்காணா ஆழ்கடலே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-19, 4:29 pm)
பார்வை : 258

மேலே