இயற்கை

இயற்கையில் வந்தது ஒலி
ஒலி ஏந்தி வந்தது மொழி
மொழியில் காண்பது சொற்கள்
சொற்களின் கோர்வை கவிதை
கவிதையில் கவின் தொக்கி நிற்க
கவிதை அழகு, மொழியில் அழகு கவிதை ,
மொழியில் புதைந்து காணும் புதையல் அது
ஒலியில் வந்தது வேதம்
வேதங்கள் இறைவனின் கவிதைகள்
காற்றினிலே வந்த கீதங்கள் , ஒலி அலைகள்
ஒலியில் புதைந்த கவிதை அவை,

நெல்லுக்குள் ரகசியம் நெல்மணி அரிசி
சிப்பிக்குள் புதைந்து கிடைக்கும் முத்துக்கள்

இப்படி இயற்கையின் புதையல்கள்
இவை ஒவ்வொன்றும் ,,,,,
கண்ட நமக்கு வாழ்வில் நமக்கு ஏற்றம் தந்தவை

இயற்கையைப் போற்றுவோம்
இயற்கையின் நிழலில் அதன் பாதத்தில்
வாழ்வோம் வாழ்ந்தால் நமக்கு குறை
என்றும் இல்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Oct-19, 6:21 pm)
Tanglish : iyarkai
பார்வை : 420

மேலே