மித்ரன்

29 ஆகஸ்ட் 2020
திருமலை.. சங்கரியின் பேரன்...
செந்தில்.. யாமினி புத்திரன்...
மிருதுளாவின் சகோதரன்...
புதியதோர் உலக நாயகன்
அழகுப் பையன் மித்ரன்...

வரும்காலம்.. வசந்தகாலம் ...
உனக்கென்றும் புதுமையானது..
இதுவரை யாரும் காணாதது...

அழகிய மித்ரா...
ஆற்றல்மிகு மித்ரா...
பல கலைகள் பயின்று
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...

மித்ரனுக்கு எனதினிய
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

வேகமும் விவேகமும்..
நல்லோர் நட்பும் ஆதரவும்..
உனதாகட்டும்... சிந்தனை
வாய்மொழி செயல்களிலெல்லாம்
உன் திறமை என்றும்
வளர்பிறையாய் வளரட்டும்...

சரித்திரத்தில் இடம்பிடிக்க
வாழ வேண்டுமென்பதில்லை...
உன்னை உனக்குப் பிடிக்க
வாழ்ந்திடு... உனது
அறிவின்... ஆற்றலின்
விசாலத்தில் உன்
விலாசத்தை சரித்திரம்
குறித்துக் கொள்ளட்டும்...

என்றென்றும்
வசந்த வாழ்த்துக்களோடு...
அன்புத் தாத்தா.. எனக்கு
உனதினிய பறக்கும்
முத்தங்கள்... தா... தா...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்
👍😃🌹👏💐🍫🧁🚲

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Aug-20, 9:22 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 218

மேலே