இவள் சந்திராயினியோ

காமன் கவிதை கண்ணில் சொல்லுமிவள் கவிதா யினியோ
மாறன் கணையை விழியால் ஏவுமிவள் மன்மதா யினியோ
மாமன் மகளிவள் என்னை நிலவிற்கு எடுத்துச்செல்ல வந்த
சோமன் மகள்பூ விதழ்புன்னகை சௌந்தர்ய சந்திரா யினியோ !

----இப்பா அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

சொல் விளக்கம் :

காமன் மாறன் ----மன்மதனின் வேறு பெயர்கள்

சோமன் ----- சந்திரன் எ கா --- குஜராத் சௌராஷ்டிரம் சோமநாத சிவாலயம்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-20, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே