திண்டிவனம் நீர்நிலைகள் 1

நமது நகரம் 8 ஏரிகளோடு நகரத்தின் எட்டு திசையும் குட்டை குளங்கள் என்று நீரால் சூழ்ந்து! மன்னன் நல்லியக்கோடன் கிடங்கிலை 1 தலைமையாக கொண்டு ஆண்ட ஒய்மாநாடு பகுதி ஆகும் .. நீரின் தேவை அறிந்து மன்னன் நமக்கு ,நமது அடுத்த சந்ததிகளுக்கு இவ்வளவு நீர் ஆதாரங்களை விட்டுச் சென்றுள்ளான்
நமது முன்னோர்களின் கடின உழைப்பு
இன்றளவும் கம்பீரமாய் காட்சி தருகிறது
ஏரி அழிந்துவிட்டால் மீண்டும் வருமா?
வரத்து வாய்க்கால் இல்லையென்றால் நீர்நிலைகள் தான் நிரம்புமா?
நமது நகரத்தின் குடிநீர் தேவைகளை நமது நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலமாகவே பயன் படுத்திக்கொள்ளலாம். ஏன் கோடிகளை செலவு செய்து அடுத்த மாவட்டமே, கிராமமோ அவர்களின் நீரை சுரண்டி நாம் உயிர் வாழ வேண்டும்?
நமது நிலத்தடி நீர் மட்டம் உப்பு நீராக யார் காரணம்?
1000 ஏக்கர் ஏரி மற்றும் 7 ஏரிகள் நீரின்றி சாக்கடையாக யார் காரணம்?
குளங்கள் அழிய யார் காரணம்?
குட்டைகள் அழிய யார் காரணம்?
தொடருவோம் அடுத்த பதிவில்........
அன்புடன் ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Sep-20, 7:08 am)
பார்வை : 65

மேலே