உந்தன் அழகு
கவிதை வரிகளால் உந்தன் அழகிற்கு
கவியாரம் தந்து அலங்கரிக்க பார்த்தேன்
செதுக்க செதுக்க உளியால் கல்சிதைய
உருப்பெறா கருங்கற்போல் உன்னழகிற்கு
கவிதை ஆரம் அமையலையே இதோ
அந்த சிற்பிப்போல் நான் செய்வது
அறியாது விழிக்கின்றேன் உந்தன் அழகின்
மகிமையை அறிந்து கொள்ள