காதல்

நான் அவளை நோக்க அவளும் என்னை
பொன்னான விழிகள் ஜோடி சேர்ந்திட
ஏனோ பேசாது மௌனமாய் நின்றாள்
மடந்தை ஆனால் திறந்த அவள்
மலர் விழிகள் இரண்டும் அபிநயத்தில்...
அவள் மனதில் நினைக்கும் மௌன
காதல் மொழிகள் அத்தனைக்கும் அபிநயம்
புரிந்திட என்மீது அவளுக்கு காதல்
என்பது புரிந்தது இனிக்க

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (28-May-21, 9:56 am)
Tanglish : kaadhal
பார்வை : 115

மேலே