மூன்றெழுத்து Trending

!
#அ-வ-ள் என்ற மூன்றெழுத்தும்
#இ-வ-ன் என்ற மூன்றெழுத்தும்
#கா-த-ல் என்ற மூன்றெழுத்தால் இணைய
#சூ-ழ-ல் என்ற மூன்றெழுத்தாலும்
#க-ட-மை என்ற மூன்றெழுத்தாலும்
#பி-ரி-வு என்ற மூன்றெழுத்தை சந்திக்க
#உ-ரி-மை என்ற மூன்றெழுத்தை இழந்து
#சோ-க-ம் என்ற மூன்றெழுத்தில் மூழ்கி
#த-னி-மை என்ற மூன்றெழுத்தை தழுவி, என்
#அ-க-ம் என்ற மூன்றெழுத்து, அவள்
#மு-க-ம் என்ற மூன்றெழுத்தை
#தே-ட-ல் என்ற மூன்றெழுத்து தொடர
#நி-ஜ-ம் என்ற மூன்றெழுத்தில் இல்லாவிட்டாலும்
#கா-த-ல் என்ற மூன்றெழுத்து என்
#நி-னை-வு என்ற மூன்றெழுத்தில் நிலையாக
#வா-ழு-ம் என்ற மூன்றெழுத்தில், நம்பிக்கையுடன்
#இ-ர-வு என்ற மூன்றெழுத்தில்
#க-ன-வு என்ற மூன்றெழுத்தை தேடி
#க-வி-தை என்ற மூன்றெழுத்தை நிறைவு செய்கிறேன்!!!

$®!

எழுதியவர் : (19-Jul-21, 6:19 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 42

மேலே