அவள்
அந்திசாய் நேரம் ஆதவன் மேற்கே சிவன்தான்
வானம் சிவக்க தாமரை முகத்தாள்
அவளும் சிவந்தாள் ஆதவன்போல
அவள் தேன் சிந்தும் அதரமும்
சிவந்தது பவள மல்லி அவள் சிரிப்பாய்
என்னருகே வருகின்றாள் இப்போது அவள்
நடந்துவரும் தாமரை அன்ன
கதிரவனை நாடும் தாமரை அறிவேன்
இங்கோ கதிரவன் நாடும் தாமரை ஆனாள் அவள்
மயக்கும் மலையில் என்மனம் கவர்ந்து