ஒரு வாழ்த்து

தெரியாமல் தான்
கேட்கிறேன்....
எதற்காக உனக்கு
பிறந்தநாள் வாழ்த்து
சொல்ல வேண்டும்....?.

உனக்கு ஏன்
பிறந்தநாள் வாழ்த்து
சொல்ல வேண்டும்....?.

நீ
பிறந்ததில்
உனக்கு என்ன பங்கு
இருக்கிறது...?.

250 டால் வலியைதான்
ஒரு மனிதனால்
தாங்க முடியும்.
251 டால் வலி என்றாலும்
மனிதன் இறந்து விடுவான்.

ஆனால்
பிரசவத்தில்,
ஒரு தாயின் வலி
400 டால்....

இப்போது சொல்....
உனக்கு
பிறந்தநாள் வாழ்த்து
ஏன் சொல்ல வேண்டும்...?

உனக்கு இது
பிறந்தநாள்...
உன் அன்னைக்கோ
400 டால் வலி நாள்..

அன்னைக்கு மட்டுமே
பிறப்பித்த நாள்
வாழ்த்து சொல்ல வேண்டிய
இந்த நாளில்..

போனால் போகட்டும்...
உனக்கும்
வாழ்த்துக்கள்...

அன்னைக்கும்
உனக்கும்,

பிறப்பித்த
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்....


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (12-Sep-21, 9:59 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : oru vaazthu
பார்வை : 49

மேலே